அதிக இடங்களில் வெற்றி முகம் – பாகிஸ்தானில் இம்ரான்கானின் இன்னிங்ஸ் தொடக்கம்
_பாகிஸ்தானில் 270 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர்பக்துக்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து இன்று தேர்தல் நடந்தது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த நிலையில், ஓட்டுகளை எண்ணும் பணி தொடங்கியது.__
ஆரம்ப கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ–இன்சாப் கட்சி முன்னிலை வகித்தது. பெரும்பாலான இடங்களில் அந்த கட்சியின் வேட்பாளர்களே முன்னிலை பெற்று வந்தனர். அடுத்த இடத்தில், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி உள்ளது. பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையில் களம் காணும் பாகிஸ்தான் மக்கள் கட்சி மூன்றாவது இடத்தில் உள்ளது.
272 பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட பாகிஸ்தானில், பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க 137 தொகுதிகளில் வென்றாக வேண்டும் என்ற நிலையில், 102 தொகுதிகளில் தெரிக்-இ-இன்சாப் கட்சியும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 43 இடங்களிலும், பிலாவல் பூட்டோவின் கட்சி 26 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது.
இன்னும் சில மணிநேரத்தில் வெற்றி நிலவரங்கள் வர தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் 1996-ம் ஆண்டு கட்சி தொடங்கிய இம்ரான்கான் இதுவரை போட்டியிட்ட மூன்று பொதுத்தேர்தல்களில் பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை. இந்நிலையில், தற்போது கிடைத்துள்ள வெற்றி அந்த கட்சியினரை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply