அமெரிக்காவில் நகராட்சி கூட்டத்தில் இந்திய பெண் கவுன்சிலர், அமெரிக்க கவுன்சிலரை மணந்தார்
_அமெரிக்காவில் வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள சார்லோட் நகரில், நகராட்சி கூட்டம் நடந்தது. பொதுவாக நகராட்சி கூட்டம் என்றாலே கூச்சல், குழப்பம் நிலவும். ஆனால் இந்த கூட்டத்தில் ஹாலிவுட் பட பாணியில் ஒரு திருமணமே நடந்து விட்டது. இந்த நகராட்சி கூட்டத்தில் பேசிக்கொண்டு இருந்த கவுன்சிலர் வைபவ் பஜாஜ், இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் கவுன்சிலர் டிம்பிள் ஆஜ்மெராவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்._
அதை ஆஜ்மெராவும் உடனடியாக ஏற்றுக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து நகராட்சி கூட்டத்திலேயே சபையின் மையப்பகுதிக்கு வைபவ் பஜாஜ் வந்து முழங்காலில் நின்றவாறு ஆஜ்மெராவுக்கு மோதிரம் கொடுத்து திருமணம் செய்தார். திருமணம் முடித்த சூட்டோடு சூடாக அந்த தம்பதியர் அன்பு முத்தம் பரிமாறிக்கொண்டனர். சக கவுன்சிலர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதுபற்றி டிம்பிள் ஆஜ்மெரா டுவிட்டரில் வேடிக்கையுடன், “சக கவுன்சிலர்களே, இந்த தீர்மானத்தில் யாருக்கேனும் ஆட்சேபம் இருக்கிறதா? ஏனென்றால் இரு தரப்பு ஒப்பந்தத்தில்தான் வைபவ் பஜாஜ் நம்பிக்கை வைத்து உள்ளார். முக்கியமான விஷயம், குடும்பம் சார்ந்த, அன்பான, கருணை உள்ள ஒரு வாழ்க்கைத்துணைவர் எனக்கு கிடைத்ததற்காக நன்றி செலுத்துகிறேன்” என குறிப்பிட்டு உள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply