திருப்பதி கோவிலில் ஒரே நாளில் ரூ.6.28 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகி சாதனை
_ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பதி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. திருப்பதி சென்று வந்தால் திருப்பம் வரும் என்பது பக்தர்களின் அபார நம்பிக்கை. திருப்பதிக்கு வரும் பக்தர்கள் தங்களின் பிரார்த்தனை நிறைவேறியதும் உண்டியல் காணிக்கை செலுத்துவது வழக்கம். உண்டியலில் தங்கம், வெள்ளி மற்றும் பணமாக உண்டியலில் செலுத்திவார்கள்.__
இந்நிலையில், திருப்பதி கோவிலில நேற்று ஒரே நாளில் 6.24 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை வசூலாகி சாதனை படைத்துள்ளது.
இதுதொடர்பாக தேவஸ்தானம் அதிகாரிகள் கூறுகையில், கோவில் உண்டியல் காணிக்கையாக தினமும் குறைந்தது 2 கோடி ரூபாய் வசூலாகும். நேற்று ஒரே நாளில் 6.28 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை வசூலாகி சாதனை படைத்துள்ளது என தெரிவித்தனர்.
இதற்கு முன்னர், கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி ராம நவமி அன்று 5.73 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை வசூலானது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply