கட்சியை அழிவில் இருந்து நவாஸ் செரீப் காப்பாற்றி விட்டார் : அரசியல் நோக்கர்கள் கருத்து
பனாமா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ்செரீப், அவரது மகள் மரியம், மருமகன் உள்ளிட்டோருக்கு பொறுப்புடைமை கோர்ட்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.அப்போது நவாஸ்செரீப்பும், மரியமும் லண்டனில் தங்கி இருந்தனர்.
பிரசாரம் சூடு பிடித்து இருந்த நிலையில் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பாக பாகிஸ்தான் திரும்பி அவர்கள் கைது ஆனார்கள். இத்தகைய நடவடிக்கையின் மூலம் அரசியல் சூதாட்டத்தில் அவர் தோல்வி அடைந்து விட்டார் என சிலர் கருத்து தெரிவித்தனர். ஆனால், அவர் தானாக வந்து கைது ஆனதன்மூலம் தனது கட்சியை அழிவில் இருந்து நவாஸ் செரீப் காப்பாற்றி விட்டார் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் திரும்பியதன் மூலம் அவர் சட்ட பிரச்சினையில் இருந்து மட்டும் தப்பிக்கவில்லை. தனது அரசியல் எதிர்காலத்தையும், மகள் மரியத்தின் அரசியல் விதியையும் அவர் காப்பாற்றி விட்டார்.
வெளிநாட்டிலேயே தொடர்ந்து தங்கியிருந்தால் மக்களின் நம்பிக்கையை அவரால் பெற்று இருக்க முடியாது. தற்போது பாராளுமன்ற தேர்தலில் பாதி இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறார். பாகிஸ்தான் திரும்பாமல் இருந்திருந்தால் இந்த அளவுக்கு கூட வெற்றி பெற்று இருக்க முடியாது. கட்சியே அழிந்து இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
கடந்த 2013-ம் ஆண்டு நடந்த தேர்தலில் நவாஸ் செரீப் கட்சி வெற்றி பெற்றது. அதை எதிர்த்து இம்ரான்கான் போராட்டம் நடத்தினார். தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி இஸ்லாமாபாத் ஸ்தம் பிக்கும் வகையில் 4 மாதங்கள் போராட்டம் நடத்தி அவருக்கு நெருக்கடி கொடுத்தார்.
2014-ம் ஆண்டில் பெஷாவர் ராணுவ பள்ளி யில் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 132 குழந்தைகள் கொல்லப்பட்டனர். அதன் மூலமும் நவாஸ்செரீப்புக்கு நெருக்கடி ஏற்பட்டது.
பனாமா ஊழல் வழக்கில் நவாஸ்செரீப் குடும்பத்துக்கு எதிராக இம்ரான்கான் போராட்டம் நடத்தினார். அதனால் தான் அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply