கருணாநிதி நன்றாக உள்ளார், தைரியமாக இருங்கள் – தொண்டர்களுக்கு கனிமொழி வேண்டுகோள்

திமுக தலைவர் கருணாநிதி (வயது 94), வயோதிகம் சார்ந்த உடல் உபாதைகள் காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி கோபாலபுரம் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். வீட்டிலேயே அவருக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 27-ம் தேதி நள்ளிரவில் அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே கருணாநிதியின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் எதிர்மறை தகவல்கள் பரவத் தொடங்கியதால் காவேரி மருத்துவமனை அருகில் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். நேற்று இரவு கருணாநிதியின் உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டதால் தொண்டர்களிடையே அதிர்ச்சியும் குழப்பமும் ஏற்பட்டது. கொந்தளிப்பில் இருந்த தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினார். லேசான தடியடியும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனை வளாகத்தில் பேட்டி அளித்த ஆ.ராசா ‘கருணாநிதியின் உடல் நிலை தொடர்ந்து சீராக உள்ளது. நலமாக இருக்கிறார். கருணாநிதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என்றார்.

இதேபோல் திமுக தலைவர் கருணாநிதி நன்றாக இருப்பதாக கனிமொழி எம்.பி.யும் கூறியுள்ளார். தொண்டர்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கருணாநிதியின் உடல்நிலையில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டு தற்போது உடல்நிலை சீராகி வருவதாகவும், தொண்டர்கள் அனைவரும் அமைதிகாக்க வேண்டும் எனறும் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply