மெக்சிகோவில் 100 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்தில் சிக்கியது

மெக்சிகோ நாட்டின் வடக்கு மாகாணமான டுராங்கோவில் உள்ள விமான நிலையத்தில் இருந்து 97 பயணிகள் மற்றும் 4 ஊழியர்கள் உள்பட 101 பேருடன் ஏரோமெக்சிகோ எனும் விமானம் மெக்சிகோ சிட்டியை நோக்கி புறப்பட்டது. ஆனால், ஓடுதளத்தில் இருந்து விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே திடீர் விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்தது. 

 

இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 85 பேர் காயம் அடைந்துள்ளனர், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

விபத்துகுறித்து டுராங்கோ மாகாண கவர்னர் ஜோஸ் ரோசாஸ் ஊடங்களிடம் கூறுகையில், ’விமானம் புறப்படும் போது நிலவிய மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது, புறப்பட்ட சில நொடிகளிலேயே விபத்து ஏற்பட்டதால், விமான நிலையத்திற்கு அருகே உள்ள நிலத்தில் விமானம் அவசர அவசரமாக தரையிறப்பட்டது. இந்த விபத்தில் உயிரிழப்பு போன்ற அசம்பாவிதங்கள் நிகழவில்லை’ என தெரிவித்தார்.

 

விமான நிலையத்திற்கு அருகே புற்கள் நிறைந்த பகுதியில் தரையிரக்கப்பட்ட விமாந்த்தில் பற்றி எரியும் தீயை மீட்புக்குழுவினர் அணைப்பது போன்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply