வைகோவுக்கு எதிராக தேசத்துரோக குற்றச்சாட்டு பதிவு : விசாரணை ஒத்திவைப்பு
கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதவாக பேசியதாக வைகோ மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விரைந்து முடிக்க வலியுறுத்திய வைகோ, தாமாக முன்வந்து சிறைக்கு சென்றார். 50 நாட்களுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்த பின்னர், ஜாமீனில் வெளியே வந்து வழக்கு விசாரணையை சந்தித்து வருகிறார்.
இந்நிலையில், தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு எதிராக இன்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 18-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். செப்டம்பர் 18-ம் தேதி முதல், வைகோ மீதான குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply