தேர்தலை பழைய முறையில் நடாத்துவதானாலும் புதிய சட்டம் தேவை : மஹிந்த

_மாகாண சபைத் தேர்தலை எந்த முறையில் நடாத்துவதென இதுவரையில் தீர்மானம் இல்லையெனவும் பழைய முறையில் நடாத்துவதாக இருந்தாலும் புதிதாக சட்ட மூலம் ஒன்றை நிறைவேற்ற வேண்டியுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலை இவ்வருடத்தில் நடாத்துவதற்கு முடியாது.  புதிய சட்ட மூலம் ஒன்றினால் பழைய முறைமையை மீண்டும் சட்ட மாக்கினால் மட்டுமே அது முடியும். புதிய தேர்தல் முறைமை தொடர்பான சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், நடைமுறையில் இருந்து வந்த பழைய தேர்தல் முறைமை குறித்த  1988 ஆம் இலக்க 2 ஆம் பிரிவு நீக்கப்படுகின்றது.__

 

இதனால், மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையில் நடாத்துவதிலும் சிக்கல் காணப்படுகின்றது. புதிய முறைமையில் நடாத்துவதானால், எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் மஹிந்த தேசப்பிரிய மேலும் கூறியுள்ளார்.

 

சகோதர மொழிப் பத்திரிகையொன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியொன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply