நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் நைபால் காலமானார்
இலக்கியத்துக்காக நோபால் பரிசு பெற்ற இந்திய வம்சாவளி எழுத்தாளர் நைபால் (வயது 85) லண்டனில் காலமானார். கரீபியன் தீவில் ஒன்றான டிரினாட் நகரில் 1932-ம் ஆண்டு பிறந்த வி.எஸ் நைபாலின் முழுப்பெயர் சர் வித்யாதர் சுராஜ் பிரசாத் நைபால். சுதந்திரத்திற்கு முன்பு இந்தியாவில் இருந்து மேற்கிந்திய தீவுகளுக்கு, ஆங்கிலேயர்களால் அடிமைகளாக ஏராளமான இந்தியர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த சூழலில் இவரது பெற்றோர் இந்தியாவில் இருந்து டிரினிடாட் நகரில் குடியேறினர்.
பிரிட்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்த நைபால், 30-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். 1971-ம் ஆண்டு ‘இன் ஏ ப்ரீ ஸ்டேட்’ என்ற புத்தகத்துக்கான அவருக்கு புக்கர் விருது வழங்கப்பட்டது.
‘ஏ ஹவுஸ் பார் மிஸ்டர் பிஸ்வாஸ்’ என்ற நைபாலின் புத்தகம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தியாவில் காலனியாதிக்கம் மற்றும் விவசாய தொழிலாளர்களின் நிலையை வெளிப்படுத்திய இந்த புத்தகம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. 2001-ம் ஆண்டு நைபாலுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
பிரிட்டன் அரசின் பல்வேறு ஊக்கத்தொகை பெற்று புத்தகங்களை எழுதி வந்த நைபால் லண்டனில் தங்கியிருந்தார். சிறிது காலமாக உடல்நலம் குன்றி இருந்த அவர், நேற்று காலமானார். அவரது மறைவுக்கு இலக்கியவாதிகள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply