ஸ்ரீ ல.சு.க.யில் ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை- சிரேஷ்ட உறுப்பினர் கவலை
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுங்கு விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுவது நிறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கட்சியின் ஒழுங்கு விதிகளுக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானம் எடுத்துள்ள போதிலும் அது செயற்படுத்தப்படாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எடுக்கப்படும் தீர்மானங்கள் ஒழுங்காக செயற்படுத்தப்படாமையின் காரணமாக கட்சி உறுப்பினர்கள் கட்சியை மட்டமான முறையில் விமர்சிக்கும் நிலைக்கு சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்சியின் ஒழுங்கு விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் கட்சியைப் பலப்படுத்த முடியாதுள்ளதாகவும் சகோதர மொழி ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply