19 வயது மாணவி முல்லைத்தீவில் பாலியல் பலாத்காரம்
முல்லைத்தீவு உடையார் கட்டு மகாவித்தியாலத்தில் உயர்தர பரீட்சை எழுதிவரும் லூத்மாத கோவில் பகுதியில் வசித்துவரும் 19 வயது மாணவியை பளையினை சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியை ஊர்தி ஒன்றில் கடத்தி சென்று பளைப்பகுதியில் வைத்து விருப்பத்திற்கு மாறாக பாலியல் துஸ்பிரயோகம் செய்துவிட்டு உடையார் கட்டுப்பகுதியில் கொண்டுவந்து சந்தேகநபர்கள் இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.
உடையார் கட்டு மகாவித்தியாலயத்தில் கலைப்பிரிவில் உயர்தர பரீட்சை எழுதிக்கொண்டிருந்த 19 அகவையுடைய மாணவி கடந்த 20ம் திகதியன்று பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை இளைஞர்கள் சிலர் சேர்ந்து வாகனம் ஒன்றில் குறித்த யுவதியை கடத்தி பளைப்பகுதிக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.
அங்கு குறித்த யுவதியினை விருப்பத்திற்கு மாறாக பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளனர்.
மாணவி வீடு திரும்பாத நிலையில் நேற்று மாணவியின் தாயார் புதுக்குடியிருப்பு காவல்நிலையத்தில மாணவியை காணவில்லை என்று முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை குறித்த மாணவியை உடையார் கட்டுப்பகுதியில் ஊர்தியில் கொண்டுவந்து இறக்கி விட்டுள்ளார்கள். பின்னர், மாணவி நடந்த சம்பவத்தினை தாயாரிடம் முறையிட்டுள்ளார்.
குறித்த மாணவியுடன் தாயார் காவல் நிலையம் சென்று நடந்த சம்பவத்தினை தெரியப்படுத்தியுள்ளார்.
அதனை தொடர்ந்து, புதுக்குடியிருப்பு காவல் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் கடத்திய இளைஞனை தேடி பளை சென்று கடத்தல் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த ஒரு இளைஞனை கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் கைதுசெய்யப்பட்ட இளைஞனை இன்றைய தினம் நீதி மன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக புதுக்குடியிருப்பு காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply