தமிழக நிவாரணப் பொருட்களுடன் முதலாவது கப்பல் இன்று புறப்பட்டது
யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள வடபகுதி தமிழ் மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களுடன்; முதலாவது கப்பல் இன்று 6.00 மணியளவில் காலை சென்னைத் துறைமுகத்திலிருந்து புறப்பட்டது.
இன்று வியாழக்கிழமை காலை புறப்பட்ட “கான்டி ஜோர்க்” என்ற பெயர் கொண்ட இந்தக் நாளை மறு தினம் சனிக்கிழமை கொழும்புத் துறைமுகத்தை வந்தடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கப்பலில் ஏற்றப்பட்டுள்ள கொள்கலன்கள் இலங்கையிலுள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளின் கண்காணிப்பில் லொறிகளில் ஏற்றப்பட்டு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உடனடியாக விநியோகிக்க நடவடிக்கையெடுக்கப்படுமென தமிழக அரசு அதிகாரியொருவர்; தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply