ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் ஆகிறார் ஸ்காட் மாரிசன்

ஆஸ்திரேலியாவில் சமீபகாலமாக அரசியல் ஸ்திரமற்ற தன்மை இருந்து வருகிறது. ஆளும் லிபரல் கட்சியில் தொடர்ந்து உட்கட்சி பூசல் ஏற்பட்டு அடிக்கடி புதிய பிரதமர்கள் பதவி ஏற்று வருகின்றனர். தற்போது மால்கம் டர்ன்புல் பிரதமராக பதவி வகித்து வருகிறார். லிபரல் கட்சியை சேர்ந்த முன்னாள் வங்கி அதிகாரியான இவர் கடந்த 3 ஆண்டுகளாக பிரதமர் பதவி வகித்து வருகிறார்.தற்போது இவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனவே கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. அதில் அவர் வெற்றி பெற்று தனது பதவியை தக்க வைத்துக்கொண்டார்.

ஆனால் அவருக்கு எதிராக ஆட்சியில் கடும் நெருக்கடி ஏற்பட்டது. உள்துறை மந்திரி பீட்டர் டட்டன் உள்ளிட்ட 3 மந்திரிகள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் அவர் மீண்டும் ஓட்டெடுப்பு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதில் தான் மீண்டும் போட்டியிடபோவதில்லை என மால்கம் டர்ன்புல் அறிவித்தார். அதன்படி அவர் போட்டியிடவில்லை. வெளியுறவு மந்திரி ஜுலி பிஷ்ப், பொருளாளர் ஸ்காட் மாரிசன் ஆகியோர் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டனர்.

அவர்களில் ஸ்காட் மாரிசன் கூடுதல் ஓட்டுகள் பெற்றார். அதை தொடர்ந்து அவர் ஆஸ்திரேலியாவின் அடுத்த பிரதமர் ஆகிறார். ஆஸ்திரேலியாவில் வருகிற 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதுவரை இவர் பிரதமராக பதவி வகிப்பார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply