கேரளாவில் கைது செய்யப்பட்ட சீமான்
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கேரளாவில் கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு உள்ளிட்டவை உண்டாகி அம்மாநிலம் அதிக பாதிப்புக்கு உள்ளானது. சுமார் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கால்நடைகள், வாகனங்கள், விவசாய பயிர்கள் உள்ளிட்டவை மோசமாக சேதமடைந்தன.
கேரளாவில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்பினை அதிதீவிர இயற்கை பேரிடர் என அறிவித்தது மத்திய அரசு. கனமழையால் அதிக பாதிப்பு மற்றும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ள கேரள மக்கள் மீண்டெழுவதற்கு அண்டை மாநிலங்கள் தொடங்கி உலகம் முழுவதும் உள்ள இந்திய மற்றும் அயல் தேசத்து மக்களுக்கும் நிதியுதவி மற்றும் நிவாரணப்பொருட்களை கேரளாவுக்கு அளித்துவருகின்றன.
அந்த வகையில், கேரள மக்களுக்கு வழங்குவதற்காக வாகனங்களில் நிவாரணப்பொருட்களை கேரளாவுக்கு கொண்டு சென்ற நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்டோரை நேற்றைய தினம் கோட்டயம் போலீசார் கைது செய்ததாக தெரிகிறது. சுமார் 2 மணி நேர விசாரணைக்கு பின்னரே அவர் விடுவிக்கப்பட்டார்.
நிவாரண பொருட்களை கொண்டு சென்ற வாகனங்களில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்களின் படம், புலி படம் பொரித்த லட்சினை உள்ளிட்டவையே சீமானை கைது செய்ததற்கான காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply