யாழ், கிளிநொச்சி, கிழக்கு உட்பட நாடுமுழுவதும் வெசாக் கொண்டாட்டம்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கிழக்கு மாகாணம் உட்பட நாடு முழுவதும் இம் முறை வெசாக் பண்டிகை களைகட்டியுள்ளது.வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதிலுமுள்ள பெளத்த விகாரைகளில் விசேட பாராயணங்களும், வழி ழிபாடுகளும் இடம்பெறுவதுடன், விகாரைகளிலும், நகரங்களிலும் பெளத்த பக்தி கீதங்கள் இசைக்கப்படுகின்றன. நகரில் வெசாக் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, அன்னதானம், தாகசாந்தி என்பனவும் நடைபெறுகின்றன. புத்தரின் வாழ்க்கைச் சரிதத்தையும், ஞானத்தையும் விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வெசாக் பந்தல்களைக் கண்டுகளிக்க வருவோரின் நலன் கருதி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். வெசாக் பந்தல் அமைப்புக் குழுவினருடன் இணைந்து பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளதோடு, சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இம்முறை வெசாக் பண்டிகை மத அனுஷ்டானங்களுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு, தேசிய நிகழ்வு மாத்தறையில் நடைபெறுகிறது.

கொழும்பில் 8வது தடவையாகவும் பெளத்தாலோக வெசாக் வலயம் அமைக்கப்பட்டுள்ளதுடன், பேலியாகொடை, பலாமரச்சந்தி, தெமட்டகொடை, நாவலச்சந்தி, கொதடுவ, உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வெசாக் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேவேளை, 30 வருடங்களுக்குப் பின்னர் வட பகுதியிலும், கிழக்கு மாகாணத்திலும் வெசாக் பண்டிகை களைகட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். நாகவிகாரையில் வெசாக் களைகட்டியுள்ளதுடன் விசேட நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, கிளிநொச்சி லும்பினி விகாரை புனரமைக்கப்பட்டு இம்முறை வெசாக் கொண்டாடப்படுகிறது. 19 வருடங்களுக்குப் பின்னர் முதற் தடவையாக கிளிநொச்சி விகாரையில் வெசாக் அனுட்டிக்கப்படுகிறது. புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ள இந்த விகாரையில், நேற்று (08) புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வன்னி கட்டளைத் தளபதியும், 58 ஆம் படைப் பிரிவின் கட்டளைத் தளபதி ஷவேந்திர சில்வாவும், நேற்று ஊர்வலமாகச் சென்று சிலையைப் பிரதிஷ்டை செய்துவைத்தனர். இந்த நிகழ்வில் பெருந்தொகையான படையினரும் கலந்துகொண்டனர். கிளிநொச்சி விகாரையில் நேற்று இரவு விசேட பூஜை வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

தவிரவும், களுத்துறை ரஜமகா விகாரையில் நடந்த நிகழ்வில் நேற்றுக் காலை ஐயாயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டுள்ளனர்.கிழக்கு மாகாணத்தில் நேற்று வெசாக் தினம் வெகு விமர்சையாக அனுஷ்டிக்கப்பட்டது.

இராணுவ முகாம்கள், பொலிஸ் நிலையங்கள் விஷேட அதிரடிப்படையினரின் முகாம்கள் போன்றவற்றில் வெசாக் பந்தல்கள்,வெசாக் கூடுகள் அமைக்கப்பட்டு வெசாக் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மயிலம்பாவெளி இராணுவ முகாமில் வெசாக் தாக சாந்திப் பந்தலொன்று அமைக்கப்பட்டு வீதியினால் பயணித்த மக்களுக்கான குளிர் பாணங்கள் வழங்கப்பட்டன. மட்டக்களப்பு நகருக்குப் பொறுப்பான இராணுவப் பொறுப்பதிகாரி மேஜர் கமல் சிறியின் ஏற்பாட்டில் இத்தாக சாந்திப்பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

இதேபோன்று மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவும் பொலிஸாரினால் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. மட்டக்களப்பு ஆரையம்பதி, கோவில்குளம் இராணுவ முகாமிலும் வெசாக்தின நிகழ்வுகள் கெப்டன் இராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. மட்டக்களப்பு பொது நூலகம் முன்பாக வெசாக் கூடுகள் போட்டிக்காக வைக்கப்பட்டு போட்டியும் இடம்பெற்றது. இதில் மட்டக்களப்பு பொலிஸ், இரா ணுவம், விமானப்படை என்பன வெசாக் கூடுகளை அமைத்து இப்போட்டியில பங் குபற்றின.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply