அபிவிருத்திக்கு வடக்கு, கிழக்கு மக்கள் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பு அவசியம் : ஜனாதிபதி
வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கும் அபிவிருத்தியின் அனுகூலங்களை பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பினை நிறைவேற்றுவேற்றுவதற்கு அம்மாகாணங்களின் மக்கள் பிரதிநிதிகள் ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கேட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் இரண்டாவது கூட்டம் நேற்று (27) நடைபெற்றது. இதில் கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி முதற்தடவையாக ஜனாதிபதி செயலகத்தில் கடந்த 30ஆம் திகதி கூடியது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்தப்படும் விதம் மற்றும் அவற்றின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுகள் நேற்றைய கூட்டத்தின் போது இடம்பெற்றன.
எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், அமைச்சர்கள் மஹிந்த சமரசிங்ஹ, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, கயந்த கருணாதிலக, டீ.எம்.சுவாமிநாதன், றவூப் ஹக்கீம் ,மனோ கணேசன்,பிரதி அமைச்சர் காதர் மஸ்தான்,அங்கஜன் இராமநாதன்,தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் செயலாளர் பீ.சிவஞானசோதி, நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க உள்ளிட்ட அமைச்சின் செயலாளர்கள், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள், முப்படைத் தளபதிகள், பொலிஸ் மாஅதிபர் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையின் முக்கியஸ்தர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply