சிங்கப்பூர் கொடியை கிழித்து இந்திய கொடியை காட்டிய இந்திய வம்சாவளி நபரின் வேலை பறிபோனது
இந்தியாவை சேர்ந்தவர் அவிஜித் தாஸ் பட்நாயக். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரில் வசித்து வரும் அவர் அங்குள்ள டி.பி.எஸ். வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் சுதந்திர தினத்தினை முன்னிட்டு 11 ஆயிரம் உறுப்பினர்கள் கொண்ட சிங்கப்பூர் இந்தியர்களுக்கான குரூப்பின் முகநூல் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.__
கடந்த ஆகஸ்டு 14ந்தேதி வெளியான அந்த புகைப்படத்தில், டி சர்ட் ஒன்றில் இருந்த சிங்கப்பூர் கொடி கிழிக்கப்பட்டு இருந்தது. அதனடியில் இந்திய கொடி தெரிந்தது. இந்திய கொடி வெளியில் தெரிவதற்காக அவர் சிங்கப்பூர் கொடியை கிழிந்த நிலையில் காண்பித்துள்ளார். தொடர்ந்து, இன்னும் எனது இதயம் இந்தியனாக உள்ளது என தலைப்பும் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு சிங்கப்பூரை அவமரியாதை செய்யும் வகையில் உள்ளது என பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை அடுத்து அந்த பதிவு நீக்கப்பட்டது. சிங்கப்பூரில் வசித்து வந்த நிலையிலும் மனதளவில் இந்தியனாக தொடர்ந்து இருக்கிறேன் என வெளிப்படுத்த விரும்பியுள்ளார் என்று அவருக்கு ஆதரவாக வங்கி தெரிவித்தது.
ஆனால், இன்று அந்த வங்கி வெளியிட்ட செய்தி ஒன்றில், அவர் வங்கியில் பணியில் இல்லை என தெரிவித்துள்ளது. எங்களது ஊழியர்களின் இதுபோன்ற செயல்களை வங்கியானது கடுமையாக எதிர்க்கிறது என தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் நாட்டு சட்டப்படி கொடியை அவமரியாதை செய்யும் நபருக்கு அதிகபட்ச அளவாக ஆயிரம் சிங்கப்பூர் டாலர் மதிப்பில் அபராதம் விதிக்கப்படும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply