வெள்ளை மாளிகை ஆலோசகர் டான் மெக்கான் விரைவில் வெளியேறுகிறார் : டிரம்ப்
அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி நடந்த ஜனாதிபதி தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டிரம்ப் வெற்றி பெறவும், ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்கிய ஹிலாரி கிளிண்டன் தோல்வி அடையவும் ரஷியா நேரடியாக தலையிட்டது என்ற புகார் எழுந்தது. இது தொடர்பாக ராபர்ட் முல்லர் தலைமையிலான குழுவின் சிறப்பு விசாரணை நடைபெற்று வருகிறது. நேர்மையான அதிகாரி என்ற பெயர் பெற்றவர். __
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் அரசின் ஆலோசகராக பணிபுரிந்து வரும் டான் மெக்கான் விரைவில் வெளியேறவுள்ளார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், வெள்ளை மாளிகையில் ஆலோசகராக பணிபுரிந்து வரும் டான் மெக்கான் விரைவில் வெளியேற உள்ளார். நான் அவருடன் நீண்ட நாள்கள் பணிபுரிந்து வந்துள்ளேன். அவரது பணி செய்யும் திறமை மிகவும் பாராட்டுக்கு உரியது என பதிவிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply