ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு உதவிய அமெரிக்க விமானப்படை அதிகாரிக்கு 25 ஆண்டு ஜெயில்

அமெரிக்க விமான படையின் வான்வழி போக்கு வரத்து கட்டுப்பாட்டு அதிகாரியாக பணிபுரிந்தவர் இகாய்கா எரிக் காங் (35).இவர் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் முகாமிட்டிருந்த போது அங்கு பணிபுரிந்தார். அப்போது ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு பல்வேறு வழிகளில் உதவி செய்தார்.

அதன் பிறகும் அவர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்தார். அதை அமெரிக்காவின் ‘எப்.பி.ஐ.’ உளவு நிறுவனம் கண்டுபிடித்தது.

கடந்த ஆண்டில் ஒகுவில் உள்ள ஸ்கோ பீல்டு ராணுவ அலுவலகத்தில் கைது செய்யப்பட்டனார். அவர் மீது ஹவாய் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த கோர்ட்டு இவரை குற்றவாளி என அறிவித்து 25 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply