போதைப் பொருளுக்கு எதிராக ஒன்றிணையுமாறு ஜனாதிபதி உலக நாடுகளுக்கு அழைப்பு
போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக உலக மக்களும் அனைத்து அரசாங்கங்களும் ஒன்றிணைந்து ஒத்துழைப்புடன் செயற்பட முன்வர வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேபாளத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.நேபாளத்தின் கத்மண்டு நகரில் இடம்பெற்றுவரும் வங்காள விரிகுடா வலய நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒன்றியம் எனும் பிம்ஸ்டெக் (BIMSTEC) அமைப்பின் நான்காவது அரச தலைவர்களின் சந்திப்பில் நேற்று(30) பிற்பகல் உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.
சட்ட விரோத போதைப்பொருள் கடத்தலானது இன்று உலக நாடுகள் எதிர்நோக்கியுள்ள பாரிய சவாலாக அமைந்துள்ளது. அதற்கான தீர்வை பெற்றுக்கொள்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply