கேரளாவில் பரவும் எலிக்காய்ச்சல் : 12 பேர் உயிரிழப்பு
கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்தன. சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. 483 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது வெள்ளம் வடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பத் தொடங்கி உள்ள நிலையில், சுகாதார அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மழை பாதிப்பு பகுதிகளில் தொற்றுநோய்கள் ஏற்படத் தொடங்கி உள்ளன. குறிப்பாக எலிக்காய்ச்சல் பரவி வருகிறது.
இந்த காய்ச்சலுக்கு இன்று வரை 12 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். எலிக்காய்ச்சலுக்கு நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கூறி உள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply