மியான்மார் கடற்பரப்பில் மிதந்து வந்த பேய்க் கப்பல் :மீனவர்கள் அதிர்ச்சி

மியான்மரின் யங்கூன் கடற்பகுதியில் சந்தேகத்திற்குரிய பெரிய துருப்பிடித்த கப்பல் ஒன்று நின்று கொண்டிருந்ததை அப்பகுதி மீனவர்கள் கண்டுபிடித்ததையடுத்து, பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. குறித்த கடற் பகுதிக்கு வந்த பொலிஸார் அதில் ஏதேனும் துப்பு கிடைக்குமா என்று சோதனையிட்டு வருகின்றனர்.

 

“சாம் ரடுலங்கி PB 1600” என்று பெயர் எழுதப்பட்டிருந்த அக்கப்பல் மியான்மரின் தலைநகர் பகுதியில் உள்ள கடற்கரையில் தனியாக மிதந்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அக்கப்பலை சோதனையிட்டபோது “அக்கப்பலில் மாலுமிகளோ அல்லது பொருட்களோ எதுவுமில்லை” என்று யங்கூன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply