அரசாங்கத்திடம் சம்பளம்பெறும் ஆங்கில ஆசிரியர் விடுதலைப் புலிகள் அமைப்பில்: இராணுவம்

பாலாவி பகுதியில் கைதுசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளில் அரசாங்கத்தின் சம்பளத்தைப் பெறும் பட்டதாரி ஆங்கில ஆசிரியை ஒருவரும் உள்ளடங்குவதாக இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது. 
 
“செவ்வாய்க்கிழமை மன்னார்-பூநகரி வீதியில் நடைபெற்ற மோதலில் விடுதலைப் புலிகளின் பாலாவி முகாம் கைப்பற்றப்பட்டது. இந்த முகாம் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட நான்கு பெண் போராளிகளில் ஒருவர் அரசாங்க ஆங்கில ஆசிரியை” என இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஆண்டு 6௰ வரையான வகுப்புக்களுக்கு ஆங்கில ஆசிரியையாகப் பணியாற்றிவந்த நிலாவெளி(28) சகோதரனும், சகோதரியும் விடுதலைப் புலிகள் அமைப்பில் பலவந்தமாக இணைத்துக்கொள்ளப்படுவதைத் தடுப்பதற்காவே தான் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்ததாக இராணுவத் தலைமையகம் கூறியுள்ளது.

கோப்பாய் கல்வியல் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துக்கொண்டு அரசாங்கத்தின் சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு குறிப்பிட்ட ஆசிரியை இலங்கை அரசாங்கப் படைகளுக்கு எதிராகப் போராடி வருவதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

பலாவிப் பிரதேசத்திலிருந்து ஏ௩2 வீதியின் 7வது மைல் கல் பகுதியிலேயே அந்த ஆசிரியை இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டதுடன், ஏனைய இரண்டு பெண் போராளிகளும் பரந்தன், மல்லாவி பகுதிகளில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

“தன்னுடன் பணியாற்றிய 100ற்கும் மேற்பட்டவர்கள் படையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவர்களில் சிலர் தன்னுடைய வகுப்பைச் சேர்ந்தவர்கள் எனவும், பெரும்பலானவர்கள் பலவந்தமாக இணைத்துக்கொள்ளப்பட்டவர்கள் அல்லது விடுதலைப் புலிகள் மீதிருக்கும் அச்சத்தால் இணைந்துகொண்டவர்கள்” இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளால் பலவந்தமாக இணைத்துக்கொள்ளப்பட்ட தனது சகோதரன் மற்றும் சகோதரியின் உயிர்களைக் காப்பாற்றுவதற்காகவே அந்த ஆசிரியர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்துகொண்டதாக இராணுவத் தலைமையகம் கூறியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply