பாகிஸ்தானுக்கான ரூ.2 ஆயிரம் கோடி நிதியுதவியை நிறுத்த அமெரிக்க ராணுவம் முடிவு
பயங்கரவாத இயக்கங்களுக்கு துணை போவதாகவும், ஆப்கானிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத இயக்கங்களுக்கு புகலிடம் அளிப்பதாகவும் கூறி பாகிஸ்தானுக்கான நிதியுதவியை நிறுத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சில மாதங்களுக்கு முன் கூறியிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவில் உள்ள சர்வதேச ராணுவ பள்ளியில் பாகிஸ்தான் வீரர்கள் சேர தடை விதிக்கப்பட்டது. அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் உண்டாகியது. இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தில் பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொள்ள அமெரிக்க ராணுவம் வழங்கும் 300 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.2 ஆயிரம் கோடி) நிதியுதவியை நிறுத்தி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மிகச்சமீபத்தில் பாலஸ்தீன அகதிகளுக்கான நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply