அவுஸ்திரேலியாவில் தாக்குதல் நடாத்த திட்டமிட்ட நிஸாம்தீன் பிரபல அமைச்சரின் உறவினர் ?
அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல் ஒன்றைத் திட்டமிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட இலங்கை மாணவன், அரசாங்கத்திலுள்ள பிரபல அமைச்சர் ஒருவரின் உறவினர் என தெரிவிக்கப்படுகின்றது. மொஹமட் நிஸாம்தீன் எனப்படும் 25 வயதுடைய இலங்கையரான இவர் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர் பல்கலைக்கழகத்தில் தொழில் புரியும் ஒரு மாணவர் என தெரியவந்துள்ளது.
அவுஸ்திரேலிய நேரப்படி கடந்த வியாழக்கிழமை பின்னேரம் அந்நாட்டுப் பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டு, வெள்ளிக்கிழமையன்று நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
இவர் கைது செய்யப்படும் போது பயங்கரவாத தாக்குதல் நடவடிக்கையொன்றைத் திட்டமிட்டதற்கான ஆவணங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சகோதர மொழி தேசிய வார இதழொன்று இன்று(02) செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, இவரின் மாணவர் வீசா இம்மாதம் (செப்டம்பர்) மாதம் நிறைவடைய விருந்ததாகவும் இவர் இதுவரையில் பயங்கரவாதச் செயலுடன் தொடர்புபட்டவர் என்பதற்கான எந்தவித குற்றச்சாட்டுக்கும் உட்படாதவர் எனவும் த கார்டியன் செய்திச் சேவை அவுஸ்திரேலிய பொலிஸாரை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply