நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதி செய்ய தீவிர நடவடிக்கை

சகலருக்கும் சமநீதியை உறுதி செய்து ஒழுக்கமிக்க நாட்டை கட்டியெழுப்பும் அளப்பரிய பொறுப்பு அரசாங்கத்திடம் இருப்பதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.கிளிநொச்சியில் நேற்று (03) இடம்பெற்ற புதிய நீதிமன்றத் கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதி செய்ய தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் நீதிமன்ற உட்கட்டமைப்பு வசதிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

கடந்த மூன்றாண்டுகளில் வடக்கில் நீதிச் செயற்பாடுகளை மேம்படுத்த 220 கோடி ரூபாவுக்கு மேலான தொகை செலவிடப்பட்டுள்ளது. மாங்குளம், முல்லைத்தீவு, யாழ்ப்பாண நீதிமன்றங்களுக்காக புதிய கட்டிடங்கள் அமைக்கப்படுகின்றன. அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் அவற்றைத் திறக்கக்கூடியதாக இருக்குமென அமைச்சர் தலதா அத்துக்கோரள கூறினார்.

நிகழ்வில் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் மற்றும் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசிரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரல பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், நீதிபதிகள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply