சட்டம், ஒழுங்கு இல்லாத நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்பட மாட்டாது : பிரதமர்
சட்டவாட்சியை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸ் சேவையை முன்னெடுப்பது அரசாங்கத்தின் இலக்காகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.பம்பலப்பிட்டி பொலிஸ்துறை படையணி மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை பொலிஸின் 152 ஆவது நிறைவாண்டு நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சட்டம், ஒழுங்கு இல்லாத நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்பட மாட்டாது. கடந்த காலத்தில் பொலிஸார் பல்வேறு வெற்றிகளை அடைந்ததோடு பல பின்னடைவுகளையும் எதிர்நோக்கினார்கள். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அமைதியான முறையில் நடந்த முடிந்தமை மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
திகனயில் இடம்பெற்ற கலவரம் கவலைக்குரிய சம்பவமாகும். இதன்மூலம் அனைவரும் பாடங்களை கற்றுக்கொள்வது அவசியமாகும். பொலிஸாருக்கு தேவையான சகல ஒத்துழைப்புகளையும் அரசாங்கம் வழங்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
கடந்த 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் குற்றச்செயல்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக குறிப்பிட்ட பிரதமர், பொலிஸ் சேவை சார்ந்த பதவி உயர்வு, சம்பள அதிகரிப்பு பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும், 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது கடந்த ஆண்டின் குற்றச் செயல்களின் எண்ணிக்கை 35 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாகவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply