ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று மன்மோகன் சிங்கைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்
புதுடில்லி சென்றிருக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று வியாழக்கிழமை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
பீம்டெக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை புதுடில்லி சென்றிருந்த மஹிந்த ராஜபக்ஷ, அங்கிருந்து மாலைதீவு சென்று மீண்டும் புதுடில்லி திரும்பினார்.
அவர், இன்று வியாழக்கிழமை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் பொருட்டு அதிகாரங்களைப் பகிர்வது மற்றும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டிருக்கும் இராணுவ நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் பற்றியும் மஹிந்த ராஜபக்ஷ, மன்மோகன் சிங்கிற்கு விளக்கிக் கூறுவார் எனக் கூறப்படுகிறது.
இலங்கையில் மோதல்கள் நிறுத்தப்படவேண்டுமென தமிழக சட்டசபையில் நேற்று புதன்கிழமை ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இலங்கை ஜனாதிபதிக்கும், இந்தியப் பிரதமருக்குமிடையில் சந்திப்பு நடைபெறவுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply