முல்லைத்தீவு கரையோரத்தில் இருதரப்புக்குமிடையில் பாரிய மோதல்

முல்லைத்தீவு கரையோரத்தில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கு மிடையில் கடும் மோதல் நடைபெற்றுள்ளது. முல்லைத்தீவு கரையோரத்தில் கரியமுள்ளிவாய்க்கால் பகுதியில் தொடர்ந்தும் கடும் சமர் நடைபெற்று வரும் நிலையில், நேற்று முன்தினம் அந்தப் பகுதியிலுள்ள புலிகளின் மண் அணையைத் 58 ஆவது படையணியினர் முழுமையாகக் கைப்பற்றியுள்ளதாகப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த மண் அணையைக் கைப்பற்றிய பின் 6 ஆவது கெமுனுவாச் படையணியும் 7 ஆவது சிங்கப் படையணி மற்றும் 9 ஆவது விஜயபாகு படையணியும் மேலும் முன்னேறி தந்திரமாக மண் அணையைக் கடந்து சென்றுள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்தது.கடந்த 6 ஆம் திகதி முதல் இந்தப் பகுதியில் தொடர்ந்து கடும் சமர் நடைபெற்று வருகிறது. இந்த மண் அணையைத் தக்க வைக்க விடுதலைப் புலிகள் தங்களது முழுப் பலத்தையும் பயன்படுத்தி கடும் பதில் தாக்குதலை நடத்தி வந்தனர்.

எனினும் புலிகளுக்கு படையினர் குறிப்பிடத்தக்களவு சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்தச் சமரில் 35 க்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டதுடன் ஆயுதங்கள் பலவும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டதாகவும் படையினர் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply