லிபியாவில் திரிபோலி விமான நிலையம் மீது ராக்கெட் வீச்சு
லிபியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. சமீபத்தில் கிளர்ச்சியாளர்கள் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் செய்ய ஐ.நா. சபை நடவடிக்கை எடுத்தது.
இந்த நிலையில் அந்த நாட்டின் தலைநகரான திரிபோலியில் இயங்கி வருகிற ஒரே விமான நிலையமான மட்டிகா விமான நிலையத்தை குறிவைத்து நேற்று முன்தினம் ராக்கெட்டுகள் வீசப்பட்டன. அவற்றில் ஒரு ராக்கெட் மத்திய தரைக்கடலில் போய் விழுந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த ராக்கெட் வீச்சை நடத்தியது யார் என உடனடியாக தெரியவரவில்லை. இருப்பினும் இந்த ராக்கெட் தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் நேரவில்லை என மட்டிகா விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள கிளர்ச்சியாளர்களின் செய்தி தொடர்பாளர் கூறினார்.
இந்த ராக்கெட் தாக்குதல் எதிரொலியாக, எகிப்து நாட்டின் அலெக்சாண்டிரியா நகரத்தில் இருந்து திரிபோலிக்கு வந்து கொண்டிருந்த லிபிய விமானம் மிஸ்ரட்டா நகருக்கு திருப்பி விடப்பட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நகரம் திரிபோலியில் இருந்து 190 கி.மீ. கிழக்கே அமைந்து உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply