ஒடிசா கடற்கரையில் 20 அடியில் விநாயகர் உருவம்

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி மக்களின் மனங்களிலும் தாக்கத்தை உண்டாக்கி வருகிறார்.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியான இன்று பசுமையை வலியுறுத்தும் வகையில் பிரபல மணல் சிற்பி சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் கடவுள் விநாயகரின் 20 அடி உருவம் பதிந்த மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.

விநாயகரின் மணல் சிற்பத்தை வரைந்து அதன் கீழே பசுமையை காப்போம், பிளாஸ்டிக் குப்பைகளை வெல்வோம் எனவும் மண்ணில் எழுதியுள்ளார்.

புரி கடற்கரையில் அவர் வரைந்துள்ள விநாயகரின் மணற்சிற்பம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply