இந்தியாவின் முன்னணி பொறியாளர் விஸ்வேஸ்வரய்யாவுக்கு டூடுள் வைத்துக் கொண்டாடிய கூகுள்
இந்தியாவின் முன்னோடி பொறியாளரான விஸ்வேஸ்வரய்யா ஆங்கிலேய ஆட்சியில் பொதுப்பணித் துறையில் பணியாற்றியவர். அணைக்கட்டுத் தொழில்நுட்பத்தின் விற்பன்னரான இவர் தானியங்கி மதகு தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தவர். இந்தத் தொழில்நுட்பம் முதன்முதலாக புனேயில் கடக்வசல அணைக்கட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு அணைக்கட்டுகளின் பின்னால் இவரது உழைப்பு உள்ளது.
அவரது பங்கைக் கவுரவிக்கும் வகையில் அவரது பிறந்த தினமான செப்டம்பர் 15 இந்திய அரசால் பொறியாளர் தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இன்றைய தினம் விஸ்வேஸ்வரய்யாவின் 158வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, நாட்டுக்கு அவர் ஆஅற்றிய அவரது திறமையை கவுரவிக்கும் வகையில் சமூக வலைதளமான கூகுள் இன்று அவரது படத்தை டூடுளாக வைத்து கொண்டாடி வருகிறது.
சர் உள்ளிட்ட பல்வேறு பட்டங்களை பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply