ஜனாதிபதி கொலை சதி: தொலைபேசி குரல் பதிவில் சந்தேகம் : IGP
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரைக் கொலை செய்ய சதி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு சாட்சியாக முன்வைக்கப்படும் தொலைபேசி குரல் பதிவில் சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்த சதித் திட்டத்தில் தொடர்புபட்டுள்ளதாக தெரியவருமாயின் வழங்க முடியுமான உயர்ந்த பட்ச தண்டனையை அவருக்கு வழங்க பின்னிற்கப் போவதில்லையெனவும் பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார்.
பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவுக்கு பொலிஸ் திணைக்களத்தில் எதிரிகள் இருக்கின்றார்கள் என்பதை மறந்து விடக் கூடாது என்றும் பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் இது தொடர்பில் கருத்துவெளியிட்டுள்ளார்.
பல்வேறு குரல்களில் பேச முடியுமான திறமைசாலிகள் பலர் இருக்கும் இக்கால கட்டத்தில் நாலக சில்வா கூறியதாக கூறப்படும் குரல் பதிவு குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் ஆணைக்குழு அதிகாரி மேலும் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply