இலங்கைக்கு ஏவுகணைப் போர்க்கப்பலை வழங்குகிறது சீனா

கடற்படையினால் பயன்படுத்தப்பட்ட ஏவுகணைப் போர்க்கப்பல் ஒன்றை சிறிலங்காவுக்கு சீனா வழங்கவுள்ளது. 1993ஆம் ஆண்டு சீனக் கடற்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட “ரொங்லிங் “என்ற ஏவுகணைப் போர்க்கப்பலே சிறிலங்கா கடற்படைக்கு வழங்கப்படவுள்ளது.

தற்போது சீனாவில் உள்ள ஹூடோங் துறைமுகத்தில் இந்தக் கப்பலுக்கு மீள் பொருத்தும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. சிறிலங்கா கடற்படையின் வண்ணம் தீட்டப்பட்டு பி-625 என்ற தொடர் இலக்கமும் எழுதப்பட்டுள்ளது.இந்தப் போர்க்கப்பல் சிறிலங்கா கடற்படையின் ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களின் அணியில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்த நவீன போர்க்கப்பலின் பிரதான போராயுதமாக ரி-79 வகையைச் சேர்ந்த 100 மி.மீ இரட்டைக் குழல் பீரங்கி இருக்கும்.அத்துடன் கப்பலின் பின்புறமாக ரி-76ஏ ரகத்தைச் சேர்ந்த, 37 மி.மீ இரட்டைக் குழல் விமான எதிர்ப்புப் பீரங்கிகள் இரண்டும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்தக் கப்பலில் உலங்குவானூர்தி ஒன்று தரையிறங்குவதற்கான தளமும் நடுத்தர உலங்குவானுர்தி ஒன்றுக்கான தரிப்பிடம் மற்றும் களஞ்சியமும் உள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply