7 பேரை விடுவிக்க கவர்னர் தாமதிப்பது ஏன்?- நடிகர் மன்சூர் அலிகான் கேள்வி

திருப்பரங்குன்றம் அருகே உள்ள பெருங்குடி கண்மாயில் பனைமர விதைகளை நடும் நிகழ்ச்சி நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று நடந்தது. இதில் நடிகர் மன்சூர்அலிகான் கலந்து கொண்டு பனைமர விதைகளை நட்டார். இதில் ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் நாம் தமிழர் கட்சி சார்பில் கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மன்சூர் அலிகான் நிருபர்களிடம் கூறியதாவது:-

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரும் 27 வருடம் சிறைத்தண்டனை அனுபவித்து விட்டனர். அவர்களை விடுதலை செய்யக்கூடாது என்பதற்காக எச்.ராஜா போன்றோர் திசை திருப்பும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது உச்சநீதிமன்றம் 7 பேரையும் விடுவிக்க கவர்னருக்கு அதிகாரம் உள்ளது என கூறியுள்ளது.

ஆனால் தமிழக கவர்னர் இது தொடர்பாக முடிவு எடுக்காமல் தாமதம் செய்து வருகிறார்.

உச்சநீதிமன்ற உத்தரவு, தமிழக அரசு தீர்மானம் ஆகியவை அனுப்பியும் 7 பேரை விடுவிக்க கவர்னர் தாமதிப்பது ஏன்? மத்திய அரசின் ரப்பர் ஸ்டாம்பாக செயல்படும் கவர்னரை உடனே மாற்ற வேண்டும்.

ராஜீவ் கொலை வழக்கில் சுப்பிரமணியசாமி, சந்திரசாமியை விசாரிக்காமல் அப்பாவிகள் மீது வழக்கு போட்டு 27 வருடம் சிறை வைத்துள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்தால் பெட்ரோல் விலை குறையும்.

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply