கூடுதல் வரி விதிப்பு எதிரொலி – அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க தயாராகிறது சீனா
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தக போர் தீவிரமடைந்துள்ளது. சீனப்பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பதும், பதிலுக்கு அமெரிக்க பொருட்கள் மீது சீனா கூடுதல் வரி விதிப்பதும் தொடர்வதால் வர்த்தக உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்று மேலும் 200 பில்லியன் டாலர் (சுமார் ரூ.14 லட்சம் கோடி) மதிப்பிலான சீனப்பொருட்களுக்கு அமெரிக்கா 10 சதவீதம் கூடுதல் வரி விதித்துள்ளது. செப்டம்பர் 24-ம் தேதி முதல் இந்த புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது. ஜனவரியில் இருந்து வரிவிதிப்பு 25 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த வரிவிதிப்புக்கு பதிலடி கொடுப்பதற்கு சீனாவும் தயாராகி வருகிறது. இது தொடர்பாக துணை பிரதமர் லியு ஹி இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரியானது அமெரிக்காவுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், சீனாவிடம் போதிய நிதி மற்றும் நிதிக்கொள்கை திட்டங்கள் இருப்பதால் சீனாவுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் சீனா செக்யூரிட்டீஸ் ரெகுலேட்டரி கமிஷன் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மேலும் இந்த வர்த்தக மோதலை தீர்க்க இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர் யோசனை கூறியுள்ளார்.
வரி விதிப்புக்கு பதில் நடவடிக்கையாக அமெரிக்க பொருட்களுக்கு சீனா கூடுதல் வரி விதிக்குமேயானால், மூன்றாவது கட்டமாக சீன பொருட்களுக்கு வரியை கூட்டுவோம் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply