போதைப்பொருள் தகவல்களை அறிவிக்க இன்று முதல் புதிய தகவல் கூடம்
ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பற்றிய தகவல்களைப் பெறுவதற்காக பொலிஸ் தலைமையகத்தில் விசேட நடவடிக்கைக் கூடம் அமைக்கப்படவுள்ளது.பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் நேரடி மேற்பார்வையின் கீழ் இந்த விசேட நடவடிக்கைக் கூடம் இயங்கவுள்ளது. இது இன்று மாலை 6 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்படும். தொடர்ச்சியாக 24 மணி நேரமும் இயங்குவது இதன் சிறப்பம்சமாகும்.
பொதுமக்கள் தொலைபேசி மூலம் விசேட நடவடிக்கைக் கூடத்தைத் தொடர்புகொண்டு பாதுகாப்பான முறையில் தகவல் அறிவிக்கலாம்.அழைக்க வேண்டிய இலக்கங்கள் 0113 024 803, 0113 024 815, 0113 024 820, 0113 024 848, 0113 024 850 ஆகியவையாகும்.பக்ஸ் மூலம் தகவல் அறிவிக்க 0112 472 757 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.
போதைபொருள் கட்டுப்பாட்டு முயற்சிகளுக்காக தம்முடன் கைகோர்த்துக்கொள்ளுமாறு பொலிஸ் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply