நமது ராணுவ வீரரை சித்தரவதை செய்து கொன்ற பாகிஸ்தான் – இன்றைய ஆசிய கோப்பை போட்டியை இந்தியா புறக்கணிக்குமா ?
இந்திய எல்லைப் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் சில தினங்களுக்கு முன்னதாக மாயமானதாக ராணுவம் தெரிவித்திருந்தது. அவரை கண்டுபிடிப்பதற்காக தேடுதல் குழு ஒன்றையும் ராணுவம் அமைத்தது. இதற்கிடையே காணாமல் பாதுகாப்புப்படை வீரர் கடுமையான சித்தரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்களுடன் எல்லையில் சடலமாக கண்டெடுக்கபப்ட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்திடம் அகப்பட்ட வீரரை அவர்கள் சித்தரவதை செய்துள்ளனர். அவரது தொண்டைப்பகுதி அறுக்கப்பட்டுள்ளது. உடல் முழுவதும் கத்தியால் குத்தப்பட்ட அடையாளங்கள் உள்ளன. இறுதியாக அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார் என இந்திய ராணுவத்தின் உயரதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்காமல் அத்துமீறும் பாகிஸ்தான் ராணுவத்தின் அடாவடித்தனம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மூன்று நாட்களுக்கு முன்னதாக ரஜோரி மாவட்டத்தில் இந்திய நிலைகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நமது ராணுவ வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி, துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரின் ஒரு பகுதியாக இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியை பாகிஸ்தான் பிரதமர் இம்ரன் கான் நேரடியாக பார்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரக்கமே இல்லாமல் இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் ராணுவம் இந்த ஆண்டு 633 முறை அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றது முதல் மூன்று முறை அத்துமீறியுள்ளது.
எனவே, பாகிஸ்தான் ராணுவத்தின் மிருகத்தனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக இன்று நடைபெறும் பாகிஸ்தானுடனான ஆசிய கோப்பை போட்டியை புறக்கணித்து இம்ரான் கானுக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா எனும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply