இலங்கை குறித்து ஜப்பான் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் சர்வதேச அமைப்புக்கள் வேண்டுகோள்
இலங்கையில் மோதல் காரணமாக மோசமடைந்து வரும் மனிதபிமான நிலவரம் தொடர்பில் ஜப்பான் முக்கிய பங்கு வகிக்க வேண்டுமென பிரபலமான சர்வதேச அமைப்புக்கள் 4 ஜப்பானிய பிரதமர் டாரோ அசோவிற்கு அனுப்பிய கடிதமொன்றில் தெரிவித்துள்ளன. இலங்கை தொடர்பாக அவதானித்து வரும் சர்வதேச அமைப்புக்களான மனித உரிமைகள் கண் காணிப்பகம், சர்வதேச நெருக்கடிகள் குழு, சர்வதேச மன்னிப்புச்சபை, பாதுகாப்பிற்கு பொறுப்பான உலகளாவிய மையம் ஆகியன இணைந்தே ஜப்பானிய பிரதமரிற்கு கடிதமொன்றை நேற்று அனுப்பி வைத்துள்ளன.
“மனிதாபிமான விடயத்தில் முக்கிய பங்கு வகிப்பதும், இலங்கைக்கு பிரதான நிதியுதவி வழங்கு நாடானா ஜப்பானிற்கு இலங்கையில் மக்களை பாதுகாப்பதர்கும், நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும், மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்தி குறித்து கனம் செலுத்துவதில் முக்கிய பங்கு உண்டு.” என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் ஜப்பான் இலங்கை நிலவரம் தொடர்பில் ஆராய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அரசிற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நிலவும் யுத்தத்தினால் அதிகளவான உயிர் சேதங்கள் ஏற்படுள்ளதாகவும் இது சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறும் செயல் எனவும் இதுவரையிலும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இது தொடர்பில் ஒழுங்காக ஆராயப்படவில்லை எனவும் எதிர்வரும் கூட்டத்தொடரில் இலங்கை நிலவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் ஆராய்ந்து உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவ்வமைப்புகள் சுட்டிக்காட்டி உள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply