நுவரெலியா சம்பவம் தொடர்பில் விஷேட விசாரணை
நுவரெலியா வைத்தியசாலையின் கண் பரிசோதனை நிலையத்தில் சிகிச்சை பெற்று பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்தியர் அனில் ஜாசிங்கவிற்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச் சபை மாநாடு உள்ளிட்ட அரச வைபவங்கள் பலவற்றில் கலந்து கொள்வதற்காக நியுயோர்க் நகரிற்கு சென்றுள்ள அவர் தொலைபேசி அழைப்பின் மூலம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நுவரெலியா வைத்தியசாலையில் கண் நோய்க்காக வழங்கப்படும் தடுப்பூசியினை தற்காலிகமாக பாவிப்பதை நிறுத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியசாலையின் பணிப்பாளரிற்கு அறிவுருத்தியுள்ளார்.
குறித்த கண் பரிசோதனை நிலையத்திற்கு கடந்த வாரம் 55 நோயாளிகள் வருகை தந்துள்ளதுடன் அதில் 17 நோயாளிகளுக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ள காரணத்தால் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நோயாளிகளுக்கு சிகிச்சைகள் ஆரம்பிக்கபட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த தடுப்பூசி ஏனைய வைத்தியசாலைகளிலும் வழங்கப்பட்டிருப்பினும் இவ்வாறான சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply