48 மணித்தியாலங்களுக்குள் புலிகளை முற்றாக தோற்கடிக்க முடியும் : கோதபாய ராஜபக்ஷ

ஐக்கிய நாடுகள் அமைப்பினை பிழையான வழியில் திசை திருப்பும் நோக்கிலேயே புலிகள் போலியான இழப்பு விபரங்களை வெளியிட்டு வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்றைய தினம் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையில் நடைபெறவுள்ள கூட்டத்தை இலக்கு வைத்து புலிகள் போலிப் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இதன் ஒரு கட்டமாகவே வன்னி மோதல் தவிர்ப்பு வலயத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2000 பொதுமக்கள் இலங்கை அரசாங்கப் படையினரின் எறிகணைத் தாக்குதல்களுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தும் நோக்கில் புலிகள் இவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். ஒரே நாளில் 2000 பொதுமக்கள் உயிரிழக்கக் கூடிய வகையில் இராணும் எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தால் அது தொடர்பான தகவல்கள் சர்வதேச சமூகத்திற்கு கிடைக்கப் பெற்றிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
யுத்த கள நிலவரங்களை கண்காணிக்கும் நோக்கில் சில செய்மதிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் புலிகளை முற்றாக தோற்கடிக்கக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply