குழந்தைகளையும் பெண்களையும் முன்னிறுத்தி நெடுஞ்சாலையை முடக்குவது அபாயகரமானது; சட்டவிரோதமானது : ரொறொன்ரோ பொலிஸ்
குழந்தைகளையும் பெண்களையும் முன்னிறுத்தி நெடுஞ்சாலையை முடக்குவது அபாயகரமானது; சட்டவிரோதமானது என ரொறொன்ரோ பொலிஸ் தலைமையர் பில் பிளையர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான புலிகளின் ஆதரவாளர்கள் ரொறன்ரோவில் உள்ள ஸ்பாடினா அவெனியு கார்டினர் நெடுஞ்சாலையை நேற்று (மே. 10) ஞாயிற்றுக்கிழமை இரவு 7:00 மணியளவில் முடக்கியுள்ளனர். மாலைநேரம் வழமையான நெரிசல் மிக்க கார்டினர் நெடு ஞ்சாலையின் போக்குவரத்தை இந்த ஆர்ப்பாட்டம் முற்றாக முடக்கி விட்டது.
இதனைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பொலிஸார் நிலமையை சீர்செய்ய அழைக்கப்பட்டனர். வன்முறையாக நடந்து கொண்டதால் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் அறிவித்துள்ளது. நல்லிரவுக்கு பின் வீதி மறியலில் ஈடுபட்டவர்கள் தாமாக கலைந்து சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply