இறுதி யுத்தத்தின் பேரழிவுக்கு சம்பந்தனும் மாவையுமே காரணம் : ஆனந்தசங்கரி
யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும், தங்களது தொலைபேசிகளைச் செயலிழக்கச் செய்துவிட்டு, அமைதி காத்தனர். இதனால் தான், பேரழிவே ஏற்பட்டது. இதற்கு, இவ்விருவருமே பொறுப்பெனக் குற்றஞ்சாட்டிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, இவ்விருவருக்கும் உடந்தையாக, ஏனையவர்கள் இருந்தனரென்றும் கூறினார்.
யாழ்ப்பாணத்திலுள்ள சங்கரியின் அலுவலகத்தில், நேற்று நடைபெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், பங்காளிகளாக அல்லாமல் கூட்டாளிகளாக யார் வந்தாலும், தமிழர் விடுதலைக் கூட்டணியில் சேர்க்கத் தயாரென்றும் அவ்வாறு பலரும் வந்து இணைந்துகொண்டு, கூட்டாகத் தேர்தலில் போட்டியிட்டுப் பெருமளவில் வெற்றியைப் பெற்றுக் கொண்டால், தான் கட்சியையே அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக்கொள்ளத் தயாரென்றும், அவர் மேலும் கூறினார்.
இனியும் தமிழரசுக் கட்சியை மக்கள் நம்புவதற்குத் தயாராக இல்லையெனக் கூறிய அவர், அதனால் தான் இன்றைக்கு வடக்கு முதலமைச்சராக இருக்கின்ற விக்கினேஸ்வரனை, தமிழரசுக் கட்சியில் இனியும் இணைந்துக்கொண்டு செயற்பட வேண்டாமெனத் தான் கூறியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply