நாமல் மற்றும் நாலக நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் ஊழலுக்கு எதிரான படை அணியின் பணிப்பாளர் நாமல் குமார ஆகியோர் இன்று காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜராகியுள்ளனர்.

நாலக டி சில்வா மற்றும் நாமல் குமார ஆகியோரை நீதிமன்றில் இன்று ஆஜராகுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் கடந்த 5 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது. இலங்கை அரச தலைவர்களை கொலை செய்வதற்கான சூழ்ச்சி இருப்பதாக நாமல் குமாரவால் வெளியிடப்பட்ட ஒலிப்பதிவில் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா பேசியிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply