தேசத்தின் பொதுவான எதிரி மீண்டும் தலைத்தூக்குவதற்கு நாட்டில் இடமில்லை : ஜனாதிபதி சர்வதேச தாதியர்கள் தினத்தில் தெரிவிப்பு

கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற இடங்களில் மீட்கப் பட்டுள்ள ஆயுதங்களின் தொகை யைப் பார்க்கின்ற பொழுது நாட்டிற்கு ஏற்படவிருந்த அழிவுகளை யாராலும் புரிந்து கொள்ள முடியும் என்பதுடன் பயங்கர வாதிகளிடம் மட்டுமன்றி பல்வேறு விடயங்களில் அடிமைப்பட்டே இந்நாடு நிர்வகிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் இனங்களின் பொதுவான எதிரி மீண்டும் தலைத் தூக்குவதற்கு நாட்டில் இடமில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அமெரிக்காவில் புதிய ஜனாதிபதி பதவியேற்று 100 நாட்களில் இரண்டு மில்லியன் மக்கள் வேலையிலிருந்த நீக்கப்பட்டனர். நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயினன் அரச சேவையை பலப்படுத்துவது அவசியமானதாகும் என்றும் அவர் சொன்னார். சர்வதேச தாதியர்கள் தினத்தை முன்னிட்டு அலரிமாளிகையில் இன்று நடைபெற்ற பிரதான வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply