மணலாறு கன்னிமுறுக் குளம் வீதி இராணுவத்தினா; வசம்!

மூன்று நாட்கள் தொடர்ந்து இடம்பெற்ற கடும் மோதலையடுத்து இராணுவத்தினர்  மணலாறு கன்னிமுறுக்குளம் வீதியைக் கைப்பற்றியுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

இந்த மோதலின்போது புலிகளுக்குச் சொந்தமான 21 பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு ஆந்தன் குளம் பகுதியிலுள்ள புலிகளின் 21 பதுங்கு குழிகளை இராணுவத்தினர்  கைப்பற்றிய போது அதனை மீட்பதற்காக புலிகள் கடும் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

ஏனினும் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட பதில் தாக்குதலில் புலிகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலின் போது கொல்லப்பட்ட ஐந்து புலிகளின் சடலங்களையும் இக்ரணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை  முல்லைத்தீவு  கரபிட்டி பகுதியில் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்ட படையினர்; மீது புலிகள் எரிகணைத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இராணுவத்தினர் கைப்பற்றியுள்ள கிளிநொச்சி பாலவி பிரதேசம் மீது புலிகள் நேற்று முன் தினம் இரவு எரிகணைத்; தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதனால் படைத்தரப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
கிளிநொச்சி அக்கரையான் குளத்துக்கு அண்மித்த பகுதியில் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முற்பகல் 11.40 க்கு ஆரம்பமான இக்கடுஞ் சமர் மாலை ஐந்து மணி வரை நீடித்ததாக தேசியப் பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply