59வது படையணி வட்டுவாகல் பாலத்தை மீட்டுள்ளது
பிரிகேடியர் பிரசன்ன சில்வா தலைமையில் 59வது படையணி இன்று (மே. 12) காலை முல்லைத்தீவு நகருக்கு வடக்கே உள்ள வட்டுவாகல் பகுதியையும் வெள்ளமுள்ளி வாய்க்கால் பிரதேசத்தையும் இணைக்கும் வட்டுவாகல் பாலத்தை விடுவித்துள்ளனர். இந்தப் பாலம் மீட்கப்பட்டதை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒர் இராணுவ நடவடிக்கையென படைத்துறை வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். வன்னி மனிதாபிமான நடவடிக்கை அதன் இறுதி நாட்களை நெருங்க உள்ளதை உறுதியுடன் தாம் சொல்லமுடியுமென மேலும் தெரிவித்து உள்ளனர்.
55வது படையணியின் கட்டளைத் தளபதியாக இருந்த பிரிகேடியர் பிரசன்ன சில்வா அண்மையில் இராணுவத்தின் தலைமையகத்தால் 59வது படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக தற்காலிகமாக இடமாற்றம் பெற்று வந்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில், பிரிகேடியர் பிரசன்ன சில்வா 55வது படையணியை ’நகர்கோவில்’ பகுதியில் இருந்து ’சாலை’ வரை மிகக்குறைந்த இழப்புகளுடன் கடலோர பிரதேசங்களில் தனது படையணியை சிறப்பாக வழி்நடத்தி ஈரூடக படைநகர்வில் வல்லமை மிக்கவரென கீர்த்தி பெற்றவர்.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply