சீனாவிடம் இறைமையை இழந்து விட்டது இலங்கை : அமெரிக்க பாதுகாப்புச் செயலர்
சீனாவுடனான உடன்பாட்டின் விளைவாக, இலங்கை தனது சொந்த துறைமுகத்தின் இறைமையை இழந்துவிட்டது என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மட்டிஸ் தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்டுள்ள உடன்பாட்டையே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அமைதிக்கான ஐக்கிய அமெரிக்க நிறுவகத்தில், இது தொடர்பாக மேலும் உரையாற்றிய அமெரிக்க பாதுகாப்புச் செயலர் ஜேம்ஸ் மட்டிஸ்,
“சீனாவின் கடனைப் பயன்படுத்திய சில நாடுகள், அதனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் கவலையடைந்துள்ளன.
இலங்கையில் என்ன நடந்தது என்று பாருங்கள். அவர்கள் தமது சொந்த துறைமுகத்தின் இறைமையை இழந்துவிட்டனர்.
இதுபோன்ற பிரச்சினைகள் குறித்தும் வொஷிங்டனில் விரைவில், சீன பாதுகாப்பு அமைச்சருடன் நடத்தவுள்ள சந்திப்பின் போது வெளிப்படையாகப் பேசுவேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply