புதிய பிரதமர் நியமனம் தொடர்பில் சுப்ரமணிய சுவாமி

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் மற்றும் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் இந்தியாவின் பீ.ஜே.பி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியம் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார். தனக்கு மஹிந்த ராஜபக்ஷவை மிக நீண்டகாலமாக தெரியும் எனவும் மஹிந்த ராஜபக்ஷ பிரமதராக பதவி பிரமானம் செய்த பின்னர் தான் அவருடன் தொலைபேசியில் உரையாடியதாகவும் இதன்போது புலிகளுடன் இடம்பெற்ற யுத்தத்தின் போதும் மஹிந்த ராஜபக்ஷ டில்லிக்கு வருகை தந்த போதும் தான் வழங்கிய ஒத்துழைப்பிற்கு அவர் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். புலிகள் அமைப்பினால் அழிக்கப்பட்ட தமிழ் மக்களை மீள் குடியமர்த்துவது தொடர்பான பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்காக தான் இலங்கை வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒப்பந்தம் குறித்தும் சுப்பிரமணியம் சுவாமி கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் சீனர்களுக்கு கப்பல்களை கொண்டுவர அனுமதிக்கப்பட்டாலும், துறைமுகத்தின் கட்டுப்பாடு இலங்கையின் கீழ் மட்டுமே இருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply