புதிய அமெரிக்க தூதுவர் நற்சான்று பத்திரத்தை ஜனாதிபதியிடம் கையளித்தார்

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள அலைனா டெப்லிட்ஸ் தனது நற்சான்று பத்திரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்தார்.கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இன்று  நடைபெற்ற நிகழ்வின் போதே அவர் தனது நற்சான்று பத்திரத்தை கையளித்தார்.

இலங்கை அரசாங்கத்தின் இணக்கத்துடன், இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக அலைனா டெப்லிட்ஸ் அமெரிக்க அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டார்.

அமெரிக்க தூதுவர் மாத்திரமின்றி ஜப்பான், பிரான்ஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கான புதிய தூதுவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, ஜப்பான் தூதுவராக நியமிக்கப்பட்ட அகிரா சுகியாமா, பிரான்ஸ் குடியரசின் தூதுவர் எரிக் லவர்ட்டு மற்றும் ஆப்கானிஸ்தான் தூதுவர் அஷ்ரப் ஹைதாரி ஆகியோரும் இன்று தமது நற்சான்று பத்திரங்களை ஜனாதிபதி மைத்திரியிடம் கையளித்தனர்.

ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply